சுடச்சுட

  

  கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும்: ஆட்சியர் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 12th January 2019 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சென்னை கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
  இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
  சென்னை அம்பத்தூர் வட்டத்தில் உள்ள கொரட்டூர் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் 12, 13, 17-ஆகிய தேதிகளில் வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டன. அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
  இந்த நிலையில் கொரட்டூர் ஏரியில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் அவை கடந்த ஜனவரி10-ஆம் தேதி அகற்றப்பட்டன. கொரட்டூர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்வது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது இனி வரும் காலங்களில் குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai