சுடச்சுட

  

  பொங்கல்: மாநகரப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்

  By DIN  |   Published on : 12th January 2019 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, புறநகர் பேருந்துநிலையங்களை எளிதில் சென்றடைந்திடும் வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 மாநகரப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.
  பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நான்கு நாள்களுக்கு மொத்தமாக 14,263 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அந்த ஊர்களுக்கு ஏற்ற வகையில் இந்தப் பேருந்துகள் அனைத்தும் சென்னை கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்துநிலையம், தாம்பரம் ரயில்நிலையப் பேருந்து நிறுத்தம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. 
  24 மணி நேர மாநகரப்பேருந்து வசதி: இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக இந்த புறநகர் பேருந்து நிலையங்களை சென்றடைய வசதியாக வழக்கமாக இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளுடன், 250 பேருந்துகள் 24 மணி நேரம் இயக்கப்பட்டு வருகின்றன என மாநகரப் போக்குவரத்துக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai