தேடித் தேடி...



விஜயகுமார், துரைப்பாக்கம், 
சென்னை:
இந்த ஆண்டு நான் வாங்கிய புத்தகங்களில் ஆன்மிகப் புத்தகங்கள் அதிகம். சுந்தரர் தேவாரம், சுவாமி சுகபோதானந்தா எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், கிருபானந்த வாரியாரின் ஆடியோ சிடிகளை வாங்கியிருக்கிறேன். 
எனக்கு பாரதியாரின் எழுத்துகள், பாரதியைப் பற்றிய எழுத்துகள் மிகவும் பிடிக்கும். எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திச்சூடி விளக்கவுரை), பாரதியார் கவிதைகள் ஆகியவற்றை வாங்கியிருக்கிறேன்.
தமிழகத்தின் தலைசிறந்த கவிஞராக அறியப்பட்ட கண்ணதாசன் நல்ல சிந்தனையாளரும் கூட. ஏற்கெனவே சென்ற ஆண்டு அவர் எழுதிய நிறையப் புத்தகங்களை வாங்கினேன். இந்த ஆண்டு அவருடைய மனவாசம், நான் பார்த்த அரசியல், பகவத் கீதை ஆகிய புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். 
குழந்தைகளுக்காக திருக்குறள் விளக்கவுரை என்ற புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். சேத்தன் பகத் எழுதிய பட்ங் எண்ழ்ப் ண்ய் தர்ர்ம் 105 தங்ஸ்ர்ப்ன்ற்ண்ர்ய் 2020: கர்ஸ்ங், இர்ழ்ழ்ன்ல்ற்ண்ர்ய், அம்க்ஷண்ற்ண்ர்ய் ஆகிய இரண்டு புத்தகங்களை வாங்கினேன். 
திருக்குறள் பரிமேலழகர் உரை, திருவாசகம் இவையெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். நேரம் இல்லாததால் வாங்க முடியவில்லை.
இன்று புத்தகக் கண்காட்சியின் இரண்டு வரிசைகளில் உள்ள புத்தக அரங்குகளை மட்டுமே பார்க்க முடிந்தது. எல்லா அரங்குகளையும் பார்க்க இன்னும் இரண்டு நாள்கள் வரவேண்டும். அப்போதுதான் முழுமையாகப் பார்க்க முடியும் என்றார்.
அகிலா, போரூர்,சென்னை:
 நான் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். இந்த ஆண்டு நான் படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்களை அதிகம் வாங்கியிருக்கிறேன். டின்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்குத் தேவைப்படும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக தமிழ்நாடு பாடநூல் வாரியம் வெளியிட்டுள்ள பல புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். டின்பிஎஸ்சி தேர்வு தொடர்பான சில ஆடியோ சி.டி. புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன். 
என் மாமியாருக்காக எழுத்தாளர் லக்ஷ்மி எழுதிய நாவல்களை வாங்கியிருக்கிறேன்.
எஸ்.ராமகிருஷ்ணனின் மறைக்கப்பட்ட உண்மைகள், இந்திய வரலாறு, கல்கியின் பொன்னியின் செல்வன், அலை ஓசை ஆடியோ புத்தகங்கள் வாங்கியிருக்
கிறேன். 
ஆடியோ புத்தகங்களை வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே கேட்க முடியும். இன்னும் சொல்லப் போனால் போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் நிறைய ஆடியோ புத்தகங்கள் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கின்றன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com