சுடச்சுட

  

  அமெரிக்காவில் வரும் ஜூலை மாதம் 10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

  By DIN  |   Published on : 13th January 2019 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வரும் ஜூலை மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற உள்ளது.
   மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு இப்போது நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
   தமிழ் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெற உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்தத் தகவலை மாநாட்டு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கால்டுவெல் சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார். தமிழ்மொழி, தமிழின் தொன்மை, தமிழ் இலக்கியம், தமிழர் கலாசாரம் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். தமிழறிஞர்கள் உள்பட சுமார் 6 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
   மாநாட்டையொட்டி தமிழறிஞர் ஜி.யு.போப்பின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழடி பற்றிய சிறப்பு விவாதமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பு செய்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai