சுடச்சுட

  

  "தி சென்னை சில்க்ஸ்' கட்டடம் கட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.
   சென்னை தியாகராய நகரில், "தி சென்னை சில்க்ஸ்' நிறுவனம், புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தது.
   ஆய்விற்கு பின், 2018- ஜூனில் சி.எம்.டி.ஏ, திட்ட அனுமதி வழங்கியது. இதையடுத்து கட்டடம் கட்டும் பணியை "தி சென்னை சில்க்ஸ்' நிறுவனம் துவக்கியது. இந்த திட்ட அனுமதியை எதிர்த்து கண்ணன் பாலசந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது, கடந்த வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், சஞ்சய் கிஷன் கௌல் அமர்வு விசாரித்து மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்ததது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai