கவனியுங்கள்!

டிஜிட்டல் உபகரணங்களின் வரவுக்குப் பின் யார் வேண்டுமானாலும் படங்களை எடுக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

லஷ்மி சரவணகுமார் கதைகள் 2007 -2017 - லஷ்மி சரவணகுமார்; பக்.584; ரூ.700; கிழக்கு பதிப்பகம், சென்னை-14.

எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் 2017 வரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. உண்மையான அனுபவத்தின் வாயிலாகத் தான் கண்ட வாழ்க்கையை, உலகத்தை, மனிதர்களை நம் கண்முன் நிறுத்துகிறார் லஷ்மி சரவணகுமார். இத்தொகுப்பில் இருக்கும் எல்லாக் கதைகளுமே, அவை முடியும் இடத்திலிருந்து பெரியதொரு விவாதத்தை நமக்குள் நிகழ்த்தத் தொடங்குகின்றன. இருள்வெளிகளும் அவற்றின் இடையே தெரியும் வெளிச்சப்புள்ளிகளும் கூடிய கதாபாத்திரங்களின் பயணத்தில் நாமும் கலந்திருக்கிறோம்.

ரயில்நிலையங்களின் தோழமை - பயணக்கட்டுரைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்; பக்.100; ரூ.125; தேசாந்திரி பதிப்பகம், சென்னை-93.

நூலாசிரியரின் பயண அனுபவங்களின் தொகுப்பு நூலாக மலர்ந்திருக்கிறது. பயணத்தின் ஊடே மனிதன் உலகை அறிந்து கொள்வது மட்டுமின்றி தன்னையும் அறிந்து கொள்கிறான். பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை, இருட்டிற்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன. உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல். நூலாசிரியரின் பயண அனுபவங்கள் இந்த நூலின் வழியாக வாசகர்களிடம் பயணிக்கின்றன.

ஆவணப்பட இயக்கம் - அம்ஷன் குமார்; ரூ.200; சொல் ஏர் பதிப்பகம், சென்னை-41.

டிஜிட்டல் உபகரணங்களின் வரவுக்குப் பின் யார் வேண்டுமானாலும் படங்களை எடுக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் ஆவணப்படத்தை தொழிற்பயன்பாட்டிற்காகவோ, கலை வெளிப்பாட்டிற்காகவோ தனிப்பட்ட தேவைக்காகவோ உருவாக்க அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வது மிக அவசியம்.
 ஆவணப் படத்துக்கு வர்ணனை எழுதுதல், நேர்காணல் செய்தல், படப்பிடிப்பு நடத்துதல், ஒலிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியன செய்தல், பட்ஜெட் தயாரித்தல், நிதியுதவி பெறுதல் போன்ற அனைத்திற்குமான வழிமுறைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com