தேடித் தேடி...


மகேஸ்வரன், முகப்பேர் மேற்கு, சென்னை:
இந்த முறை எனக்கு மட்டுமல்ல, என் வீட்டிலுள்ள எல்லாருக்கும் புத்தகங்கள் வாங்கினேன். சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? என்ற புத்தகம் தெரியாத பல விஷயங்களை சுவையாகச் சொல்லும் நூல் என்பதால் அதை வாங்கினேன். என்.பைரவன், சாருகேசி எழுதிய இனி இது சேரி இல்லை என்ற புத்தகத்தையும் , தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்  என்ற புத்தகத்தையும் எனக்காக வாங்கினேன். சென்னை வாழ்க்கையைச் சொல்லும் எம்டன் செல்வரத்தினம் எழுதிய சென்னையர் கதைகள் புத்தகத்தையும், தி.ஜானகிராமனின் எல்லாச் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பையும், அவருடைய அம்மா வந்தாள் நாவலையும் வாங்கினேன். அம்மாவுக்காக சுகி சிவம் எழுதிய மனசே, நீ ஒரு மந்திரச்சாவி என்ற புத்தகத்தையும், எப்போதும் சந்தோஷம் என்ற புத்தகத்தையும் வாங்கினேன். 
ஆ.சிவசுப்பிரமணியனின் பிராமண போஜனமும், சட்டிச் சோறும், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் அனைத்துத் தொகுதிகளையும் வாங்கியிருக்கிறேன். குழந்தைகளுக்காக நிறைய சிறுவர் நூல்கள், ஆங்கிலப் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன் என்றார்.


ஆறுமுக நயினார், பெரம்பூர்:
நிறைய இடதுசாரி நூல்கள், தமிழர் வரலாறு தொடர்பான நூல்கள், இலக்கிய நூல்கள் வாங்கியிருக்கிறேன். க.ப.அறவாணனின் தமிழர் சமூகம் தொ.பரமசிவனின் அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும் உள்பட பல நூல்களை வாங்கியிருக்கிறேன். 
மூலதனம் கற்போம், மார்க்சியம் என்றால் என்ன? உள்பட நிறைய இடதுசாரி சிந்தனை நூல்களையும் வாங்கியிருக்கிறேன். 
எஸ்.ராமகிருஷ்ணனின் எனது இந்தியா, கலிலியோ மண்டியிடவில்லை, எலியின் பாஸ்வேர்டு ஆகிய புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். 
தொ.பரமசிவன் அறிவியல்பூர்வமான சிந்தனைகளின் அடிப்படையில் தமிழக வரலாற்றை ஆய்வு செய்பவர் என்பதால் அவருடைய நூல்கள் எனக்குப் பிடிக்கும். க.ப.அறவாணனின் நூல்களில் தமிழர் வரலாறு தொடர்பான செய்திகள் நிரம்பிக் கிடக்கும். ஆழமான சிந்தனைகளின் அடிப்படையில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள் இருக்கின்றன. அதனால் அவர்கள் எழுதிய நூல்களை வாங்கியிருக்கிறேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com