திருவொற்றியூரில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு

திருவொற்றியூர் பகுதியில் நிலவி வரும் கடும் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் திங்கள்கிழமை சிறப்பு ஆய்வு நடத்தினர்.


திருவொற்றியூர் பகுதியில் நிலவி வரும் கடும் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் திங்கள்கிழமை சிறப்பு ஆய்வு நடத்தினர்.
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில்  தற்போது குடிநீர் தட்டுப்பாடு இருப்பதோடு இங்கு வழங்கப்படும் குடிநீரின் அளவும் குறைவாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடும் நிலை இருந்து வருகிறது. மேலும் இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து சென்னை குடிநீர் வாரிய திருவொற்றியூர் பகுதி பொறியாளர் ஜெகநாதன் தலைமையில் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்த சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  
அப்போது பொன்னியம்மன் நகர் பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். லாரிகள் மூலம் வழங்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இப்பகுதியில் குழாய்களை பதிக்க மதிப்பீடுகளை உடனடியாகத் தயார் செய்யும்படி என வாரிய அதிகாரிகளுக்கு ஜெகநாதன் உத்தரவிட்டார். 
இதேபோல் சரஸ்வதி நகர், சண்முகபுரம், சண்முகபுரம் விஸ்தரிப்பு, கலைவாணர் நகர், டி.கே.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குழாய்களில் போதுமான அழுத்தத்தில் குடிநீர் வருவதில்லை. இதனால் குழாய்கள் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை என புகார் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், முடிந்த அளவு குடிநீர் சிக்கனமாகப் பயன்படுத்தும்படியும் ஜெகநாதன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், வாரிய அதிகாரிகள் முத்துவிநாயகம், விஜய நிர்மலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com