முறைகேடு: கார் நிறுவன அதிகாரி கைது 

சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.14.5 கோடி முறைகேடாக வெளிநாட்டுக்கு பணப்பரிமாற்றம் செய்ததாக, கார் நிறுவன அதிகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.


சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.14.5 கோடி முறைகேடாக வெளிநாட்டுக்கு பணப்பரிமாற்றம் செய்ததாக, கார் நிறுவன அதிகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ் என்ற முகமது சமி என்ற சலீம் (43). இவர் ஒரு பிரபலமான கார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சலீம், போலி ஆவணங்கள் மூலம் 4 வங்கிகளில் கணக்குத் தொடங்கி, அதன் மூலம் வெளிநாடுகளுக்கு முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்வதாகக் கிடைத்த  ரகசியத்  தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 
அதில், சலீம் முறைகேடான பணப்பரிமாற்றம் செய்வதற்காக போலி நிறுவனங்கள் தொடங்கியிருப்பதும், போலி ஆவணங்கள் மூலம் ஹாங்காங் ரூ.14.50 கோடி பணபரிமாற்றம் செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.இதையடுத்து அமலாக்கத் துறையினர், சலீமை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com