Enable Javscript for better performance
தொழிலாளர் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் உள்பட இருவர் மீது  வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் உள்பட இருவர் மீது  வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

    By DIN  |   Published on : 11th July 2019 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சென்னை கிண்டியில் தொழிலாளர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, அந்த துறையின் துணை இயக்குநர் உள்பட இருவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
    கிண்டி தொழிற்பேட்டையில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள், அதிகமாக லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர்.
    இதில் அந்த அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் ரூ.62,800 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் அடிப்படையில், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அத்துறையின் துணை இயக்குநர் எஸ்.பாலு (52), உதவி இயக்குநர் பி.சிவக்குமார் (37) ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
    இவ் வழக்குத் தொடர்பாக போலீஸார், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai