சுடச்சுட

  


  குழாய் இணைப்பு பணி காரணமாக சென்னை முகப்பேர் கழிவுநீரேற்று நிலையம் வியாழக்கிழமை (ஜூலை 11) செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.  
  இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  முகப்பேர் எஸ்.எம்.நாராயணன் நகரில் அமைந்துள்ள கழிவுநீரேற்று நிலையத்தில் உள்ள 450 மி.மீ. விட்டமுள்ள புதிய கழிவுநீர் பிரதான குழாயை,  தற்போதுள்ள 450 மி.மீ. விட்டமுள்ள கழிவுநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கப்பட்டு இரவு 10 மணிக்கு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  இதனால், கழிவு நீரேற்று நிலையத்தின் இயக்கம்  வியாழக்கிழமை (ஜூலை 11) பிற்பகல் நிறுத்தப்படும். மேலும், இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கழிவுநீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்படும் பட்சத்தில், பொதுமக்கள் பகுதி பொறியாளரை 81449  30907 என்ற  செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai