சென்னையில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டம் தொடர்பாக பல்வேறு நீர்நிலைகளில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு


சென்னையில் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டம் தொடர்பாக பல்வேறு நீர்நிலைகளில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் வகையில் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டத்தை (ஜல் சக்தி அபியான்) மத்திய அரசு தொடங்கி உள்ளது. 
இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் வறட்சியின் பிடியில் உள்ள பகுதிகளில் நீர் சேகரிப்புத் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்தியக் குழுவினர் மாநிலம் முழுவம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி,  மத்திய சிறுபான்மை நல ஆணையத்தின் இணைச் செயலர் நிவா சிங் தலைமையில் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டக் குழுவினர் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம், சைதாப்பேட்டையில் உள்ள குளம் என மொத்தம் 4 குளங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து சென்னை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் நாள் ஆய்வில் 4 குளங்களில் மத்திய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 
இதில், அவற்றைத் தூர்வாரி ஆழப்படுத்துவது, குளங்களில் நீர் சேகரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினர். இக்குழுவினரிடம் சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட நீர்நிலைகள் குறித்து விவரங்களைக் கொடுத்துள்ளோம். வெள்ளிக்கிழமையும் (ஜூலை 12) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்றனர்.
தொடர்ந்து,  இத்திட்டம் தொடர்பாக மத்திய இணைச் செயலர் நிவா சிங் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆர். சீதாலட்சுமி, நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்ட இயக்குநர் ராஜீவ் சிங்கல், அதிகாரிகள் சுப்ராட் குமார், அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com