சுடச்சுட

  

  எழும்பூர்-பல்லாவரம் இடையே பராமரிப்பு பணி: ரயில் சேவையில் இன்று மாற்றம்

  By DIN  |   Published on : 14th July 2019 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  localtrain

  கோப்புப்படம்

  சென்னை எழும்பூர்-பல்லாவரம் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடக்கவுள்ளதால், 29 மின்சார ரயில்களின் சேவை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30, 10.40, 10.50, முற்பகல் 11.10, 11.20, 11.30, 11.40, நண்பகல் 12.00, 12.10, 12.40, மதியம் 1.15, 1.30, 2.00, பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.
   இதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.45, 10.55, முற்பகல் 11.15, 11.25, 11.35, நண்பகல் 12, 12.15, 12.45, மதியம் 1.30, 1.45, 2.15, பிற்பகல் 2.30, மாலை 3, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன.
   சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு முற்பகல் 11, 11.50 நண்பகல் 12.30, மதியம் 1, 1.45, பிற்பகல் 2.15, 2.45 மணி ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். காஞ்சிபுரம்-சென்னை கடற்கரைக்கு காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு-கடற்கரைக்கு காலை 10.55, முற்பகல் 11.30, மதியம் 12.20, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், திருமால்பூர்-கடற்கரைக்கு காலை 10.40 மணி ரயிலும் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
   இதற்கிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரு மார்க்கத்திலும் தலா 8 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் 20 முதல் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai