சுடச்சுட

  

  கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக தலைவரும், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார்.
   கொளத்தூர் உள்ள சென்னை தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததுடன், அந்தப் பள்ளிக்கு 2 கணினிகளையும், ஒரு தொலைக்காட்சிப் பெட்டியையும் வழங்கினார். 1,839 மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களான நோட்டுப்புத்தகம், எழுது பொருட்களை வழங்கினார்.
   ஜவஹர் நகரில் உள்ள அலுவலகத்தில் மகளிருக்கு தையல் இயந்திரமும், 10 ஏழைகளுக்கு நான்கு சக்கர தள்ளுவண்டிகளையும், 10 பேருக்கு மீன்பாடி வண்டிகளையும், ஒருவருக்கு மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனமும் வழங்கினார்.
   நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, வட சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் வீ.கலாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai