சுடச்சுட

  

  தேசியக் கல்விக் கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க அழைப்பு 

  By DIN  |   Published on : 14th July 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து கூறலாம் வாங்க என பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது.
  மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை சமீபத்தில் வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை வரைவு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வெளியிடப்படிருந்த சூழலில், அதனைத் தமிழாக்கம் செய்து, தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் www.tnscert.org என்ற இணையதள முகவரியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  இதனை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் பார்வையிட்டு இந்த தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்து வரும் 25-ஆ ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. மின்னஞ்சல் வழியாக கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் secert.nep2019@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலும், அஞ்சல் வழியில் கருத்து தெரிவிக்க விரும்புவர்கள் "மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6' என்னும் முகவரியிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்தரங்குகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மண்டல வாரியான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன.
  தேசியக் கல்விக் கொள்கை வரைவு மீது ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்று பலதரப்பினரும் கூறிவந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai