சுடச்சுட

    

    "நபார்டு வங்கியின் இ- சக்தி திட்டம்: 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் '  

    By DIN  |   Published on : 14th July 2019 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    NABARD

    நபார்டு வங்கியின் இ- சக்தி திட்டம் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக அதன் மண்டல தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தெரிவித்தார்.
     தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின்( நபார்டு) 38-ஆம் ஆண்டு தொடக்கவிழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகித்து பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சியில் இதயம்போன்று நபார்டு வங்கி செயல்படுகிறது. 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நபார்டு வங்கியை மனதார பாராட்டுகிறேன் என்றார் அவர்.
     விழாலில், நபார்டு வங்கி தமிழக மண்டல தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் பேசியது: கடந்த நிதியாண்டில், நபார்டு சார்பில், ரூ.11,324.74 கோடிக்கு முதலீட்டுக் கடன்களும், ரூ.4,425.10 கோடிக்கு குறுகிய காலக் கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. 1,111கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக தமிழகத்துக்கு ரூ.2,185 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.18 கோடியும் கடனுதவி வழங்கியுள்ளது. 2018-இல் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்த முக்கொம்பு அணையை சீரமைக்க ரூ.368 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களின் கணக்கு வழக்குகளை டிஜிட்டல் முறையில் செயல்படுத்தும் இ-சக்தி என்ற நபார்டின் திட்டம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது என்றார் அவர்.
     விழாவில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிலவற்றின் வெற்றிக்கதைகள் அடங்கிய புத்தகத்தையும் , தேனீ வளர்ப்பு குறித்த கையேட்டையும் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டு, சுய உதவிக் குழுக்களை வங்கிகளோடு இணைக்கும் திட்டத்தின் கீழ் சாதனை புரிந்த வங்கிகளுக்கு விருதுகளையும் வழங்கினார். விழாவில், இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பத்மஜா சுந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai