சுடச்சுட

  
  localtrain

  சென்னை-அரக்கோணம் பிரிவில், வியாசர்பாடி ஜீவா யார்டில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ஜூலை 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
   இதுகுறித்த செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு ஜூலை 13- ஆம்தேதி முதல் 17-ஆம் தேதி வரை இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை- வண்ணாரப்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதன்காரணமாக, இந்த ரயில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
   கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு ஜூலை 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இயக்க வேண்டிய மின்சார ரயில் கொருக்குபேட்டை-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த ரயில் மூர்மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றி விடப்படுகிறது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai