நடைப்பயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணி: 300 கிலோ குப்பை சேகரிப்பு 

சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணியில் 300 கிலோ குப்பை ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கப்பட்டது. 
நடைப்பயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணி: 300 கிலோ குப்பை சேகரிப்பு 

சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணியில் 300 கிலோ குப்பை ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கப்பட்டது.
 சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பங்களிப்புடன் பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரிக்க பிளாக்கிங் (ல்ப்ர்ஞ்ஞ்ண்ய்ஞ்) எனப்படும் நடைப்பயிற்சி, குறைவான வேகத்தில் ஓடும்போது வழியில் உள்ள குப்பைகளை பையில் சேகரிக்கும் நிகழ்வு அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்வை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
 காலை 6 மணிக்குத் தொடங்கி 8 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்ற நடைப்பயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணியின்போது, எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் இருந்து 300 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டது. இதில், மாநகராட்சி வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான்வர்கீஷ், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என 180 பேர் கலந்துகொண்டனர். இந்த நடைப்பயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணி அனைத்து மண்டலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com