விபத்துகளில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும்  என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும்  என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதுதொடர்பாக சட்டப் பேரவையில் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும், சாலை விபத்துகளில் சிக்கியும், கடல் நீரில் மூழ்கியும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று சட்டப் பேரவை உறுப்பினர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. உயிரிழந்த நபர்களின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாலன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த  விஜயராமலிங்கம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்,

வையைச் சேர்ந்த காளிதாஸ், ஸ்வாதி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், திருவள்ளூரைச் சேர்ந்த விஸ்வநாதன், தட்சணாமூர்த்தி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமி ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

சூறைக் காற்று காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தஞ்சாவூரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ராஜனின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் அளிக்கப்படும். 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த  செண்பகவள்ளி என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட உள்ளது.
அவர்களைத் தவிர, சாலை விபத்துகளிலும், கடலில் மூழ்கியதிலும் உயிரிழந்த மணிகண்டன், மீனாட்சி செல்வி, மணிகண்டன்,  மோகன், திருமுருகன், செல்வக்குமார், பார்த்திபன்,  பழனிசாமி,  பார்த்திபன், கருத்தப்பாண்டியன், வேணுகுமார், தருண் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com