கடற்கரை-தாம்பரம் இடையே நாளை ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை-விழுப்புரம் மார்க்கத்தில், எழும்பூர்-தாம்பரம் இடையே பொறியியல்  பணிகள் நடக்கவுள்ளதால், மின்சார ரயில்களின்


சென்னை கடற்கரை-விழுப்புரம் மார்க்கத்தில், எழும்பூர்-தாம்பரம் இடையே பொறியியல்  பணிகள் நடக்கவுள்ளதால், மின்சார ரயில்களின் சேவை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21)  ரத்து செய்யப்படுகின்றன. இந்த சேவை  தொடர்ச்சியாக 6 ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.  
அதாவது சென்னை கடற்கரை-தாம்பரம்-கடற்கரை பிரிவில், ஜூலை 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30, 10.40, 10.50, முற்பகல் 11.10, 11.20, 11.30, 11.40,  நண்பகல் 12.00, 12.10, 12.20, 12.40, மதியம் 1.15, 1.30, 2.00, பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு  தாம்பரம் செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. 
இதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.45, 10.55, முற்பகல் 11.15, 11.25, 11.35, நண்பகல் 12, 12.15, 12.45, மதியம்  1.30, 1.45, 2.15, பிற்பகல் 2.30, மாலை 3, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு முற்பகல் 11, 11.50,  நண்பகல் 12.30, மதியம் 1, 1.45, பிற்பகல் 2.15, 2.45 மணி ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். காஞ்சிபுரம்-சென்னை கடற்கரைக்கு  காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு-கடற்கரைக்கு  காலை 10.55, முற்பகல் 11.30, மதியம் 12.20, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும்  ரயில்களும், திருமால்பூர்-கடற்கரைக்கு காலை 10.40 மணி ரயிலும் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதற்கிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரு மார்க்கத்திலும் தலா 8 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் 20 முதல் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை-வேளச்சேரி இடையே...
 சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில்  ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை  21)  காலை 7.50 முதல்  மதியம் 1.50 வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, இரு மார்க்கத்திலும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு காலை 8, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40,  10.00, 10.20, 10.40, முற்பகல் 11, 11.20, 11.40, நண்பகல் 12, 12.20, 12.40, மதியம் 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு பிற்பகல் 2 மணிக்கு முதல் மின்சார ரயில் புறப்பட்டுச் செல்லும்.
 மறுமார்க்கமாக, வேளச்சேரி-சென்னை கடற்கரைக்கு காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.40, 10.50 முற்பகல் 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50, மதியம் 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள்  ரத்து செய்யப்படுகின்றன. இதன்பிறகு, வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.10 மணிக்கு முதல் மின்சார ரயில் புறப்பட்டுச் செல்லும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com