Enable Javscript for better performance
ஏடிஎம்  இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி : மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    


    சென்னை அயனாவரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அயனாவரம் பங்காரு தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரா.கோபி கிருஷ்ணன். இவர், அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் கடந்த 16-ஆம் தேதி பணம் எடுக்கச் சென்றார். அவரது கார்டு ஏடிஎம் இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்டதால், கார்டை வேகமாக வெளியே இழுத்து எடுக்க கோபி முயற்சித்தார்.  அப்போது, ஏடிஎம் கார்டுடன் சேர்ந்து உள்ளே பொருத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவி வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த இயந்திரத்தில் ரகசிய குறியீட்டை பதிவு செய்யு கீ போர்டின் மேல் ரகசிய கேமரா இருப்பதையும் பார்த்த கோபி, உடனடியாக அயனாவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
     தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஸ்கிம்மர் கருவியையும், ரகசிய கேமராவையும் கைப்பற்றி, விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.  இதற்கிடையே வழக்கின் முக்கியத்துவம் கருதி இவ் வழக்கின் விசாரணை சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.  மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபடுவது ஏழுகிணறைச் சேர்ந்த அல்லா பக்ஷ், மாங்காட்டைச் சேர்ந்த அப்துல் ஹாதி, கொளத்தூரைச் சேர்ந்த இர்பான் என்பது தெரியவந்தது. இதையடுத்து , 3 பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
    இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்: அயனாவரத்தில் ஸ்கிம்மர் கருவி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட உடன், இக் கும்பல் திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் இரு ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தியிருந்த ஸ்கிம்மர்களை எடுத்து,  அதில் பதிவாகியிருந்த தகவல்களை கொண்டு போலி ஏடிஎம் கார்டு தயாரித்து, பணத்தை திருடியுள்ளனர்.  இவ்வாறு ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரை பணம் திருடி உள்ளனர். இந்தக் கும்பல், காவலாளிகள் இல்லாத, பாதுகாப்பு
    குறைபாடுகளுடன் இருக்கும் ஏடிஎம் மையங்களை குறி வைத்து, ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.   இந்தக் கும்பல், வேறு எந்தெந்த ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியுள்ளது என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai