Enable Javscript for better performance
குப்பைகளைக் கையாள சேவை நிறுவனங்கள்: மாநகராட்சி ஆணையர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    குப்பைகளைக் கையாள சேவை நிறுவனங்கள்: மாநகராட்சி ஆணையர் தகவல்

    By DIN  |   Published on : 25th July 2019 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    அதிக அளவில் சேகரமாகும் குப்பைகளைக் கையாளுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் சேவை நிறுவனங்களை அணுகலாம் என மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து  மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
    திடக்கழிவு மேலாண்மை விதிப்படி, நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் அல்லது 5000 ச.மீ. பரப்பளவு மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்கள் தங்கள் பகுதியில் சேகரமாகும் குப்பைகளைத் தரம் பிரித்து அதில், மக்கும் குப்பைகளை உரமாக்குவதற்கான அமைப்பும்,  மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 
    அதிக அளவில் மக்கா குப்பை சேகரமாகும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து அவர்களது வளாகத்திற்குள்ளேயே கையாளுவதற்கு  அங்கீகரிக்கப்பட்ட தனியார் சேவை நிறுவனங்களை அணுகலாம். 
    இதுதொடர்பான விவரங்களை ள்ங்ள்ஜ்ம்ஃஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஸ்ரீர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் -மின்னஞ்சல் அல்லது 1913 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai