Enable Javscript for better performance
சென்னையில் நவ.24 இல் எஸ்.பி.ஐ. கிரீன் மாரத்தான் ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    


    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குழுமம் சார்பில், வருகிற நவம்பர் மாதம் 24-ஆம் தேதி கிரீன் மாரத்தான் சென்னையில் நடைபெற உள்ளது. 
    15 வெவ்வேறு நகரங்களில் நடத்தப்படும் இந்த மாரத்தான் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி லக்னோவில் துவங்கி, 2020 மார்ச் 1 ஆம் தேதி சண்டிகரில் நிறைவு பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் மாரத்தானில் 5, 10, 21கி.மீ. பிரிவுகளில் ஓட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசுமையான எதிர்காலத்துக்காக ஓடுவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு, எஸ்.பி.ஐ. ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் ஹெல்த் பார்ட்னராகவும், எஸ்.பி.ஐ லைஃப், எஸ்.பி.ஐ ம்யூச்சுவல் பண்ட்ஸ், எஸ்.பி.ஐ. கார்டுகள் ஆகியவை பங்களிப்பு செய்கின்றன. நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஆர்கானிக் டி சர்ட் வழங்கப்படுகிறது. 
    இதில் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்ப்பதாகவும், மாரத்தானில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.க்ஷர்ர்ந்ம்ஹ்ள்ட்ர்ஜ்.ஸ்ரீர்ம் மற்றும் ஜ்ஜ்ஜ்.ஹ்ர்ன்ற்ர்ர்ஸ்ரீஹய்ழ்ன்ய்.ஸ்ரீர்ம் என்ற இணையதளங்களை அணுகலாம் என எஸ்.பி.ஐ. துணை நிர்வாக இயக்குநர் அலோக் குமார் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai