Enable Javscript for better performance
சென்னையில் விதிமீறல் கட்டடங்கள்: சீல் அகற்ற புதிய கட்டுப்பாடுகள்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் விதிமீறல் கட்டடங்கள்: சீல் அகற்ற புதிய கட்டுப்பாடுகள்

    By DIN  |   Published on : 25th July 2019 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


     விதிமீறல் பகுதிகளை இடிப்பதாக கூறி சீல் அகற்ற அனுமதி கோரும் உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ)  முடிவு செய்துள்ளது.
    சென்னை பெருநகரில் விதிமீறல் கட்டடங்கள் மீது சீல் வைப்பு, இடிப்பு நடவடிக்கை எடுக்க சிஎம்டிஏ வுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 2007-ஆம் ஜூலைக்கு பின் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த விதமான சட்டப்பூர்வத் தடையும் இல்லை. 
    சிஎம்டிஏ அதிகாரிகளால்  சீல் வைக்கப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள், கட்டடத்தில் இருக்கும் பொருள்களை எடுப்பதற்காக, விதிமீறல் பகுதிகளை இடிக்கத் தயார் எனக் கூறி, சீலை அகற்றக் கோருகின்றனர். இதன் அடிப்படையில் சிஎம்டிஏ அதிகாரிகள் சில கட்டடங்களுக்கு அவகாசம் அளித்து  சீலை அகற்றுகின்றனர்.
    இவ்வாறு வழங்கப்பட்ட அவகாசத்தை, உரிமையாளர்கள் தவறாகப் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. சென்னை பெருநகரில் பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட கட்டடங்கள், சீல் அகற்ற வழங்கப்பட்ட அவகாசத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதாக, ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து இந்தக் கட்டடங்களை கண்டறிந்து மீண்டும்  சீல் வைக்கும் பணிகளை சிஎம்டிஏ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். 
     இதன்படி, ஒரு மாதத்தில்  30 கட்டடங்களுக்கு மறுமுறை சீல் வைத்துள்ளனர். மேலும், அவகாசம் வழங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, விதிமீறல் பகுதிகளை இடிப்பதாகக் கூறி, சீல் அகற்றக் கோருவோர், கட்டட இடிப்புக்கான மாநகராட்சி அனுமதியைப் பெற்று சிஎம்டிஏ- அலுவலகத்தில் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 
    இதனால், விதிமீறல் கட்டடப் பகுதியை இடிப்பது உறுதியான நிலையில் மட்டுமே சீல் அகற்றி அவகாசம் அளிக்கப்படும். இது தொடர்பான விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai