Enable Javscript for better performance
தியாகராய நகர் காவல் உதவி ஆணையர் பணி இடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    


    சென்னை தியாகராய நகர் பகுதியில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வந்த தொல்காப்பியன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
    இவர், அரியலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி இருந்தார். அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறையின் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். அது தொடர்பாக, அண்மையில் தமிழக அரசின் உள்துறைக்கு காவல்துறை உயரதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். 
    அந்த அறிக்கையில் தொல்காப்பியன் மீதான சில குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், தற்போது தியாகராய நகரில் பணிபுரிந்து வரும் அவரை, பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை உத்தரவிட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai