Enable Javscript for better performance
நாளொன்றுக்கு 2 டன் உரம் தயாரிப்பு மையம்: அம்பத்தூரில் அமைக்க மாநகராட்சி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாளொன்றுக்கு 2 டன் உரம் தயாரிப்பு மையம்: அம்பத்தூரில் அமைக்க மாநகராட்சி திட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் ரூ. 17.35 லட்சம் மதிப்பில் நாளொன்றுக்கு 2 டன் இயற்கை உரத்தயாரிப்பு மையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகளில் சுமார் 374 டன் மக்கும் குப்பைகள் அந்தந்த மண்டங்களில் உள்ள உரம் தயாரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இயற்கை முறையில் உரமாக மாற்றப்படுகின்றன. குறிப்பாக அம்பத்தூர் மண்டலத்தில்  நாளொன்றுக்கு 360 டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன. இவை அத்திப்பட்டில் உள்ள குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் கொடுங்கையூருக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
    இதில், மக்கும் குப்பைகள் அந்தந்த வார்டுகளில் உள்ள சிறிய அளவிலான உரத் தயாரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரமாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அம்பத்தூரில் மக்கும் குப்பைகள் மூலம் நாளொன்றுக்கு 2 டன் உரத்தயாரிப்பு மையத்தை அமைக்க மாநகராட்சித் திட்டமிட்டுள்ளது.
    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், அம்பத்தூர் மண்டலத்தின் அனைத்து கோட்டங்களிலும் சிறிய அளவிலான உரத்தயாரிப்பு மையங்கள் உள்ளன. இந்நிலையில், பெரிய அளவில் உரத்தயாரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கோட்டம் 82-இல் மேனாம்பேடு பகுதியில் மயான பூமியில் உபயோகப்படுத்தப்படாமல் காலியாக உள்ள இடத்தில் உரத்தயாரிப்பு மையம் ரூ. 17.35 லட்சத்தில் அமைக்கப்படும். இந்த மையத்தில் நாளொன்றுக்கு 2 டன் உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். உரம் தயாரிப்பு மையம் கட்டுவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது  என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai