Enable Javscript for better performance
முதியவர் கொலையில் உணவக ஊழியர் கைது- Dinamani

சுடச்சுட

    


    சென்னை அருகே போரூரில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உணவக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    போரூர் அருகே உள்ள மதனந்தபுரம் குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (78). இவர் அங்கு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் பாஸ்கரன், கடந்த வாரம் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கநகை, அவரது மொபெட் ஆகியவை திருடப்பட்டிருந்தன.
    இது குறித்து மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மன்சூர் (35) என்பவர் பாஸ்கரனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மன்சூரை புதன்கிழமை கைது செய்தனர்.
    விசாரணையில், மன்சூர் பாஸ்கரன் வீட்டின் அருகே இருக்கும் ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பாஸ்கரனுக்கும், மன்சூருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று பாஸ்கரன் வீட்டுக்கு மன்சூர் சென்றதும், அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியபோது மன்சூர் அங்கு கிடந்த கல்லால் பாஸ்கரனை தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai