Enable Javscript for better performance
2-ஆவது ரயிலில் வந்த தண்ணீர்  திருவல்லிக்கேணி, ராயபுரம் பகுதிகளுக்கு விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    2-ஆவது ரயிலில் வந்த தண்ணீர்  திருவல்லிக்கேணி, ராயபுரம் பகுதிகளுக்கு விநியோகம்

    By DIN  |   Published on : 25th July 2019 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!



    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2-ஆவது முறையாக கொண்டுவரப்பட்ட தண்ணீர் திருவல்லிக்கேணி, ராயபுரம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
    சென்னை நகர மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 25 லட்சம் லிட்டர் தண்ணீர், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடந்த 12-ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. அந்தத் தண்ணீர், வில்லிவாக்கம்  ரயில் நிலையத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
    அதைத் தொடர்ந்து, தலா 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 டேங்கர்களுடன் 2-ஆவது ரயில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வில்லிவாக்கம் வந்தது. இதில் உள்ள 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர், குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் வழியாகவும், லாரிகள் மூலமும் சென்னை நகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது.  இந்த ரயில் தண்ணீர் குழாய் மூலம் அயனாவரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் பகுதிகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இது தவிர திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், ராயபுரம் பகுதிகளுக்கு லாரி மூலமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை 2 ரயில்கள் மூலம், சென்னைக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் வந்திருக்கிறது. இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: ரயிலில் தண்ணீர் நிரப்புவது, ரயில் பயணம் ஆகியவற்றுக்கு 13 மணி நேரம் ஆகிறது.  முதல் கட்டமாக, தினமும் 2 ரயில்கள் மூலம் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai