முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மின்சாரம் பாய்ந்து மென்பொருள் பொறியாளர் பலி
By DIN | Published On : 30th July 2019 04:32 AM | Last Updated : 30th July 2019 04:32 AM | அ+அ அ- |

சென்னை தேனாம்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து மென் பொறியாளர் இறந்தார்.
நந்தனம் யோகி தோட்டம் 11-ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ப.ஜனட் டயானா (22). மென்பொருள் பொறியாளரான இவர், கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். டயானா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் குளிப்பதற்காக ஹீட்டர் ஸ்விட்சை போட்டாராம்.
அப்போது அதில் மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த டயானாவை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகேவுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே டயானா இறந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.