சுடச்சுட

  

  வண்டலூர் பூங்காவில் புலிகள் குறித்த சிறப்பு விடியோ வெளியீடு

  By DIN  |   Published on : 30th July 2019 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiger


  உலக புலிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, வண்டலூர் பூங்காவில் புலிகள் குறித்த சிறப்பு விடியோ திங்கள்கிழமை  வெளியிடப்பட்டது.
  சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை, புலி, சிங்கம், பறவைகள், ஊர்வனவைகள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பாக அழிவின் விளிம்பில் உள்ள வங்கப் புலிகள், வெள்ளைப் புலி என மொத்தம் 28 புலிகள் பராமரிக்கப்படுகின்றன. 
  உலக புலிகள் பாதுகாப்பு தினம் திங்கள்கிழமை (ஜூலை 29) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, அவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் பூங்கா நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பூங்காவில் பராமரிக்கப்படும் 28 புலிகளின் பெயர்கள், அவற்றின் வயது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விடியோ ல்ழ்ண்க்ங் ர்ச் ஹழ்ண்ஞ்ய்ஹழ் ஹய்ய்ஹ க்ஷ்ர்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் ல்ஹழ்ந்  என்ற தலைப்பில்  திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. யூ டியூப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த விடியோவை பார்வையிடலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai