பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், தாம்பரம்-வண்டலூர் இடையே பராமரிப்பு பொறியியல் பணி நடப்பதால், ஜூன் 2-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், தாம்பரம்-வண்டலூர் இடையே பராமரிப்பு பொறியியல் பணி நடப்பதால், ஜூன் 2-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 பகுதியாக ரத்து: சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு ஜூன் 6, 7, 8 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.02 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
 செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு ஜூன் 3, 4, 6, 7 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
 சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு ஜூன் 2, 5, 9 ஆகிய தேதிகளில் முற்பகல் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
 சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு ஜூன் 2, 9 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
 செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு ஜூன் 2, 5 ஆகிய தேதிகளில் மதியம் 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
 செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு ஜூன் 2, 9 ஆகிய தேதிகளில் மதியம் 1.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். இதுதவிர, மேலும் 3 மின்சார ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com