சுடச்சுட

  

  பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு: அறிவியல் செய்முறைத்தேர்வு

  By DIN  |   Published on : 07th June 2019 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கு வருகை புரியாத,  தேர்ச்சி பெறாத மாணவர்கள்,  தனித்தேர்வர்கள் மற்றும் நேரடியாக இந்த மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைப் பொதுத்தேர்வின்  அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஆகியோர் ஜூன் 10, 11 ஆகிய இரு நாள்களில் நடைபெறவுள்ள ஜூன் 2019 சிறப்புத் துணைத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
  இது குறித்த முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமையாசிரியரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு இது குறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப்படமாட்டாது  என அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai