கோவூர் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 14th June 2019 04:21 AM | Last Updated : 14th June 2019 04:21 AM | அ+அ அ- |

கோவூர் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவூர், அம்பாள் நகர், கோவூர் மாடத் தெரு, வெங்கடேஸ்வரா நகர், பெரியபணிச்சேரி, ஆனந்த விநாயகர் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த உடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.