சென்னை மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு கண்காட்சி

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்று வருகிறது. அக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சார்பில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு கண்காட்சியை திங்கள்கிழமை பார்வையிட்ட கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி.
சென்னை மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு கண்காட்சியை திங்கள்கிழமை பார்வையிட்ட கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி.


சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்று வருகிறது. அக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சார்பில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
புற்றுநோய், ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்தும், அவை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகள், வாசகங்கள், சிறப்பு படவிளக்கங்கள் அந்த அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. நோய்கள் மற்றும் அவற்றின் எதிர்வினைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் குறும்படமும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:
சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) கடந்த 14-ஆம் தேதி மருத்துவக் கண்காட்சி தொடங்கியது. இந்தக் கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பார்த்து பயன் பெற்றுள்ளனர்.
கண்காட்சியின் ஒரு பகுதியாக இலவச ரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் வாயிலாக இதுவரை 200-க்கும் அதிகமானோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வந்தவர்களில் 156 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து படிவங்களை பூர்த்தி செய்துக் கொடுத்துள்ளனர்.
மருத்துவக் கண்காட்சிக்கு பள்ளி மாணவர்கள், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், விரைவில் மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
தற்போது நடைபெற்று வரும் கண்காட்சி, செவ்வாய்க்கிழமையுடன் (ஜூன் 18) நிறைவடைய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com