சுடச்சுட

  


   குரூப் 4 தேர்வை தமிழ் வழியில் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக சென்னை அண்ணா நகரில் இலவச பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடத்தப்படுகிறது.
  இதுகுறித்து காஞ்சி வள்ளுவன் பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பொதுத் தமிழ் 100/100  என்னும் தலைப்பில் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வில் கேட்கப்படும் மொழிப்பாடத்துக்கான சிறப்பு அறிமுக வகுப்பு  வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.  
  இந்த வகுப்பானது, எண். 164/16, சாந்தி காலனி சாலை, மங்களம் காலனி, அண்ணா நகர் மேற்கு என்னும் முகவரியில் நடத்தப்படுகிறது. இதில் பொதுத் தமிழில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்தெந்த பாடப் புத்தகத்தை அணுக வேண்டும், எவ்வாறு அணுகினால் எளிமையாக மதிப்பெண்களைப் பெறலாம் என்பது குறித்து வள்ளுவன் பயிற்சி மையத்தின் தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விவரிக்க உள்ளனர். இத்துடன் தேர்வுக்கான நடப்பு நிகழ்வு பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவுக்கு 99528 09908 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai