பெண்களுக்கு எதிரான குற்றம்: பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி பாமக சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி பாமக சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் செளமியா பேசியது:
 பெண்கள் யாரும் எதற்கும் பயப்படக்கூடாது.  இணையத்தில் படங்களை வெளியிட்டுவிடுவார்களோ என்றெல்லாம் பயப்படக்கூடாது. மிரட்டலுக்கு அடிபணிந்து போகக்கூடாது. பெண்களுக்கான தைரியத்தை தாய்மார்கள்தான் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். உச்சபட்சமாக மரணத் தண்டனைகூட கொடுக்கலாம் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும்  ஏராளமான பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com