ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து: தனியார் பூங்காவை  மூட  நடவடிக்கை

சென்னை அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்கா ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால், ராட்டினங்களுக்கு ஸ்திரத்தன்மை சான்றிதழ் பெறும்படி காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து அந்தப் பூங்கா மூடப்பட்டது
ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து: தனியார் பூங்காவை  மூட  நடவடிக்கை


சென்னை அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்கா ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால், ராட்டினங்களுக்கு ஸ்திரத்தன்மை சான்றிதழ் பெறும்படி காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து அந்தப் பூங்கா மூடப்பட்டது


சென்னை அருகே பூந்தமல்லி பழஞ்சூரில் உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் கீழே இருந்து மேலே சுமார் 60 அடி உயரத்துக்குச் சென்று அங்கிருந்து 15 கிலோ மீட்டர் வேகத்தில் கீழே இறங்கும் (ஊழ்ங்ங் ஊஹப்ப் பர்ஜ்ங்ழ்) என்ற ராட்டினம் உள்ளது. கடந்த 18-ஆம் தேதி இந்த ராட்டினத்தை இயக்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.  ராட்டினம் சுற்றுலா பயணிகளுடன் சுமார் 10 அடி உயரத்தில் இருந்து கீழே வரும்போது, அதன் 6  இரும்பு கயிறுகளில் இரு கயிறுகள் அறுந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் இருக்கும் தொட்டில் போன்ற அந்த ராட்டினம் அறுந்து கீழே தரையில் விழுந்தது.   இந்த விபத்தில் அந்த ராட்டினத்தில் இருந்த 12 பேர் லேசான காயத்துடன் தப்பினர். இதற்கிடையே இந்த விபத்தை செல்லிடப்பேசி மூலம் விடியோ எடுத்த ஒரு நபர், அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டார். இது சமூக ஊடகங்களில்  வேகமாகப் பரவியது.
காவல்துறை ஆய்வு:  இதை அறிந்த பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் மற்றும் நசரேத்பேட்டை போலீஸாரும், அந்த பூங்காவுக்குச் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதில், 10 பெரிய ராட்டினங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.  இதையடுத்து உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன், அபாயகரமான 10 ராட்டினங்களுக்கு ஸ்திரத்தன்மை சான்றிதழ் பெற்றுவிட்டு, இயக்குமாறு நோட்டீஸ் அளித்தார். இதைத் தொடர்ந்து அந்த ராட்டினங்களை பயன்படுத்துவதை அந்த பூங்கா நிர்வாகம் நிறுத்தியது. மேலும், பூங்காவில் உள்ள அனைத்து  ராட்டினங்கள், விளையாட்டு கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்புச் சோதனைக்கு உள்படுத்திய பின்னர் பூங்காவை இயக்கும்படி அதன் நிர்வாகத்துக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ஏற்று, கடந்த இரு நாள்களாக அந்த பூங்கா மூடப்பட்டது. 
எச்சரிக்கை கடிதம்: இந்த பூங்காவின் ராட்டினங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக காவல்துறையின் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதியே எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பூங்கா நிர்வாகம், அதன் பின்னரும் ராட்டினங்களை சரிசெய்யாமல் இயக்கியுள்ளது. சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாத ராட்டினங்களை இயக்கும் தனியார் பொழுதுபோக்கு பூங்கா மீது வருவாய்த் துறையினர் மட்டுமே நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதால், இப் பிரச்னையில் காவல்துறை விபத்து ஏற்பட்டால் மட்டுமே புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com