2 வயது மகனைக் கொன்று தாய் தற்கொலை
By DIN | Published On : 23rd June 2019 04:21 AM | Last Updated : 23rd June 2019 04:21 AM | அ+அ அ- |

சென்னையை அடுத்த போரூரில் இரண்டு வயது மகனைக் கொலை செய்து, தாய் தற்கொலை செய்துக் கொண்டார்.
போரூர் தில்லையார் அகரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ், பெயிண்டர். இவரது மனைவி அஸ்வினி (26). இந்தத் தம்பதிக்கு பிரதீப் (4), சக்திவேல் (2) என இரு குழந்தைகள். பிரதீப் பிறவியிலேயே காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் இருந்துள்ளார்.
இதற்காக அவருக்கு அண்மையில் தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் செலவில் சிகிச்சைக்கு பின்னர், பிரதீப்புக்கு காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சக்திவேலுக்கும் அதே பிரச்னை இருப்பது கடந்த புதன்கிழமை மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்ததாம். இந்நிலையில் மகேஷ் தனது மூத்த மகன் பிரதீப்பை மாமியார் வீட்டில் வெள்ளிக்கிழமை விட்டுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டினுள் இளைய மகன் சக்திவேல் கொலை செய்யப்பட்டும், மனைவி அஸ்வினி தூக்கிட்டுத் தற்கொலை செய்த கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.ஆர்.எம்.சி. காவல் ஆய்வாளர் சங்கரநாராயணன் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.