"தினமணி' - சிவசங்கரி சிறுகதைப் போட்டி: சென்னையில் இன்று பரிசளிப்பு விழா
By DIN | Published On : 23rd June 2019 04:33 AM | Last Updated : 23rd June 2019 06:13 AM | அ+அ அ- |

"தினமணி' நாளிதழுடன் இணைந்து எழுத்தாளர் சிவசங்கரி நடத்திய "சிவசங்கரி சிறுகதைப் போட்டி' யில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கில் மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறும் இந்த விழாவுக்கு, "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார்.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கெüரவிக்கிறார். எழுத்தாளர் மாலன் சிறப்புரையாற்றுகிறார்.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழும விளம்பரப் பிரிவின் முதுநிலைத் துணைத் தலைவர் ஜெ.விக்னேஷ்குமார் நன்றி தெரிவிக்கிறார்.