சுடச்சுட

    


    சென்னை அண்ணாநகரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அண்ணாநகர் முதலாவது அவென்யூவில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தின் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தின் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அங்கு திங்கள்கிழமை பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக வங்கி கிளை மேலாளர் சண்முகசுந்தரி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai