சுடச்சுட

    


    திருவொற்றியூரில் அறிவிக்கப்படாத மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை எண்ணூர் விரைவுச் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   
    திருவொற்றியூர் தாங்கல் பகுதிக்கு உள்பட்ட சதானந்தபுரம்,  தியாகராயபுரம், புதிய காலனி, பீர்பயில்வான் தர்கா சாலை உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகக் கூறி  பொதுமக்கள் சுமார் இரு நூறுக்கும் மேற்பட்டோர்  செவ்வாய்க்கிழமை எண்ணூர் விரைவுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் போக்குவரத்து தடை பட்டது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் மின்பழுது உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து  மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai