உயர் அழுத்த மின் கம்பியில் பழுது: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட பாதிப்பினால், விமான நிலையம் முதல் நங்கநல்லூர் ஓடிஏ வரையிலான மெட்ரோ ரயில் சேவை செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.


உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட பாதிப்பினால், விமான நிலையம் முதல் நங்கநல்லூர் ஓடிஏ வரையிலான மெட்ரோ ரயில் சேவை செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் மெட்ரோ ரயில்கள், நங்கநல்லூர் ஓடிஏ நிலையத்துடன் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மீனம்பாக்கம் செல்ல வேண்டிய பயணிகளை மெட்ரோ நிர்வாகத்தினர் வேன் மூலம் அழைத்துச் சென்றனர். அதே போல் சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம் ஆகிய மெட்ரோ நிலையத்தில் இருந்து வண்ணார்பேட்டை வரை செல்ல வேண்டிய பயணிகளுக்கும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு, நங்கநல்லூர் ஓடிஏ நிலையம் வரை அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் அவர்கள் பயணம் செய்தனர். 
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகத்தினர் கூறுகையில், பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த இடையூறுகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அனைத்துத் தடத்திலும் அட்டவணைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com