காவல் திறனாய்வுப் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னை காவலர்
By DIN | Published On : 08th March 2019 04:38 AM | Last Updated : 08th March 2019 04:38 AM | அ+அ அ- |

வெள்ளிப்பதக்கம் வென்ற தலைமைக் காவலர் புருஷோத்தமன்.
காவல் திறனாய்வுப் போட்டியில், ஆணழகன் பிரிவில் சென்னை காவலர் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இது குறித்த விவரம்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்திய காவல் பணித்திறனாய்வுப் போட்டி சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இப் போட்டியில் சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் 80 கிலோ பிரிவில் ஆணழகன் போட்டியில் அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் புருஷோத்தமன் பங்கேற்றார்.
இதில் புருஷோத்தமன் இரண்டாமிடத்தை பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். தலைமைக் காவலர் புருஷோத்தமன் ஏற்கெனவே கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இதேபோல பல்வேறு போட்டிகளில் புருஷோத்தமன் பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் நடைபெற்ற இப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த புருஷோத்தமனை சென்னை காவல்துறை
அதிகாரிகள் பாராட்டினர்.