தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய வர்த்தகத் துறை செயலர் அனுப் வாத்வான்

தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை, ஏற்றுமதியாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறைச் செயலாளர் அனுப் வாத்வான் 
இந்திய  பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் சென்னை வர்த்தக மையத்தில்  நடைபெற்ற சர்வதேச பொறியியல் கண்காட்சியில் பேசுகிறார், மத்திய வர்த்தகத் துறைச் செயலர் அனுப் வாத்வான்.
இந்திய  பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் சென்னை வர்த்தக மையத்தில்  நடைபெற்ற சர்வதேச பொறியியல் கண்காட்சியில் பேசுகிறார், மத்திய வர்த்தகத் துறைச் செயலர் அனுப் வாத்வான்.


தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை, ஏற்றுமதியாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறைச் செயலாளர் அனுப் வாத்வான் தெரிவித்தார்.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச பொறியியல் கண்காட்சியைத்  தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி பங்களிப்பு 2013-14-ஆம் நிதியாண்டில் ரூ.21.90 லட்சம் கோடியாக இருந்தது. இது 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.22.94 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  2020- ஆம் ஆண்டு முதல் 2025- ஆம் ஆண்டுக்குள்  ரூ.13.90 லட்சம் கோடி மதிப்பில், பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி செய்ய இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்  திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். பொறியியல் பொருள்களுக்கான மூலப்பொருள்கள் விலை அதிகமாக இருப்பதாக சிறு, குறு நடுத்தர தொழில் ஏற்றுமதி நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. இதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  நாட்டின் மொத்த உற்பத்தியில் (ஜி.டி.பி) பொறியியல் துறை பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. மேலும், இந்தியாவில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 25 சதவீதமாக உள்ளது.   உலகில் உள்ள பெரிய நாடுகளில் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக,  கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால், பொறியியல் துறை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்றசூழ்நிலைகளில், போட்டிகளை மதித்து பல்வேறு விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதற்கு ஏற்றுமதி நிறுவனங்கள் புதுமையான செய்முறைகளைக் கண்டறியவேண்டும். குறிப்பாக தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை இந்திய ஏற்றுமதியாளர்கள் சிறந்தமுறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார் அவர்.
இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ரவி செஹ்கால் பேசியது: நாட்டின் மொத்த உற்பத்தியில்  பொறியியல் துறை பங்களிப்பு 13 முதல் 15 சதவீதம் ஆகும். சர்வதேச வர்த்தகத்தில் பொறியியல் துறை பொருள்கள் பங்கு 1.7 சதவீதம்.  ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முயற்சிகள் மூலமாக எளிதாக   இலக்கை அடையமுடியும்.  பொறியியல் பொருள்கள் வர்த்தகத்தில், இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக மலேசியா உள்ளது. பொறியியல் பொருள்கள், ஆட்டோ மொபைல் துறை உள்பட பல்வேறு பொறியியல் பொருள்கள் வர்த்தகத்தில் முக்கிய கூட்டாளியாக உள்ளது. இந்தியாவின் 11-ஆவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக மலேசியா உள்ளது. 
மேலும், இந்தியாவின்  25-ஆவது மிகப்பெரிய முதலீட்டாளராகவும் உள்ளது. மலேசியா-இந்தியா இடையே பொறியியல் பொருள்கள் வர்த்தகத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.இதைத்தொடர்ந்து, மலேசிய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் முதன்மை துணை செயலாளர் டாத்துக் கே.தலகவதி உள்பட பலர் பேசினர். மூன்று நாள்கள்  இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com