சுடச்சுட

  

  சென்னை, திருவான்மியூரில் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில், கைவினைப் பொருள்களின் விற்பனை கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
   தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் பூம்புகார் நிலையம் சார்பில், திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா ஃபவுண்டேஷன் சி.இ.ஆர்.சி. வளாகத்தில், ஏப்ரல்.17 முதல் மார்ச் 24 வரை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீதக் கழிவு வழங்கப்படும். நடைபெறும். இதில், பித்தளை விளக்குகள், பஞ்சலோகச் சிலைகள், மரச் சிற்பங்கள், தஞ்சாவூர் தட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கற்சிற்பங்கள், செயற்கை நகை வகைகள், காகிதக்கூழ் பொம்மைகள், அகர்பத்தி, வாசனைப் பொருள்கள், ராஜஸ்தான் ஓவியங்கள், பிகாரின் மதுபானி ஓவியங்கள், ஆந்திர மாநில மர உள்பதிப்பு வேலைகள், லக்னோவின் சிக்கன் நூல் தையல் வேலைகள், மங்களகிரி துணி வகைகள், போச்சம்பள்ளி புடவைகள், மதுரை சுங்கடி புடவைகள், பெங்கால் கைத்தறி புடவைகள், கலம்காரி, தோல் பொருட்கள், கோரைப் பாய்கள், வெள்ளை உலோகப் பொருள்கள், கலை நயமிக்க துணி வகைகள் உள்ளிட்ட பலவகை பொருள்களும் இடம்பெற்றுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai