சுடச்சுட

    

    பள்ளிகளுக்கு 50 நாள்கள் கோடை விடுமுறை: ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு

    By DIN  |   Published on : 17th March 2019 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    school1

    நிகழாண்டில் பள்ளிகளுக்கு 50 நாள்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
     தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை நடைபெறும் மூன்றாம் பருவ பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 12-ஆம் தேதி நிறைவடைகின்றன.
     மக்களவைத் தேர்தல் காரணமாக, பள்ளிகளுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க வேண்டுமென, பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்வுகள் நிறைவடைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கு, ஏப்ரல் 13 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை 50 நாள்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள்
     திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai