சுடச்சுட

    

    மமகவிடம் ஆதரவு கோரிய இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்

    By DIN  |   Published on : 17th March 2019 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர், நாகை மக்களவைத் தொகுதிகளின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள், மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினர்.
     இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கை: வருகிற மக்களவைத் தேர்தலில், திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், திருப்பூர் தொகுதி வேட்பாளர் சுப்பராயன், நாகை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர், சென்னை, மண்ணடியிலுள்ள மமக தலைமையகத்துக்குச்சென்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்து தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் உடனிருந்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai