சுடச்சுட

  

  சென்னை ரயில்வே கோட்டத்தின் பாதுகாப்புப் படையின் (ஆர்.பி.எஃப்) முதுநிலை ஆணையராக சந்தோஷ் என்.சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
   இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குநர் அருண்குமார் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையரான லூயிஸ் அமுதன் மத்திய ரயில்வே மண்டலத்தின் நாக்பூர் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
   தெற்கு ரயில்வே தலைமையகத்தில் (நிர்வாகப் பிரிவு) பாதுகாப்புப் படை துணைத் தலைமைப் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றிய சந்தோஷ் என்.சந்திரன் சென்னை ரயில்வே கோட்டத்தின் பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai