லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்

மாதவரம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்களைக் கண்டித்து, லாரி ஓட்டுநர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாதவரம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்களைக் கண்டித்து, லாரி ஓட்டுநர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 சென்னை மாதவரம்-மணலி சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் ஊழியர்கள் சனிக்கிழமை லாரிகளுக்கான கட்டணமாக ரூ. 55, ரூ. 140 முதல் ரூ.170 வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லாரி ஓட்டுநர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்நிலையில் போலீஸார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனராம். இதனால் லாரி ஓட்டுநர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் காவல் ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஓட்டுநர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com