ஒய்எம்சிஏ மைதானத்தில் மருத்துவக் கண்காட்சி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் அல்மா ஹெர்பல்ஸ் இணைந்து வழங்கும் மருத்துவம், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தொடங்குகிறது.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் அல்மா ஹெர்பல்ஸ் இணைந்து வழங்கும் மருத்துவம், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தொடங்குகிறது.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) வரை நடைபெறும் இக்கண்காட்சியில் தமிழகத்தின் முன்னணி மருத்துவமனைகளின் அரங்குகள் இடம்பெறவுள்ளன.
ஆங்கில மருத்துவம் மட்டுமன்றி,  சித்தா, ஹோமியோபதி, அக்குபஞ்சர்,   வர்மம், இயற்கை சிகிச்சை முறைகள் மற்றும் உணவு முறைகள் குறித்த சிறப்பு அரங்கங்களும் அதில் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சிக்கு வருபவர்களுக்கு சங்கர நேத்ராலயா சார்பில் இலவச கண் பரிசோதனையும், ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச மஞ்சள் காமாலை நோய் பரிசோதனையும், எல்ஜே ஏஜென்சிஸ் சார்பில் இலவச செவித் திறன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதைத் தவிர,  ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் கண்காட்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
அதுமட்டுமன்றி,  வீட்டு உபயோக பொருள் முன்னணி விற்பனை நிறுவனங்களின் சிறப்பு அரங்குகளும், மனை வணிக நிறுவனங்களின் அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com